ஜெனரல் மஹிந்த அத்துருசிங்ஹ வடக்கு ஆளுநராகிறார் ; பி.எஸ்.எம் சாள்ஸ் ஓய்வு?



(ஜே.எப்.காமிலா பேகம்)
தற்போது வடமாகாண ஆளுநராக உள்ள பி.எஸ்.எம் சாள்ஸ் வரும் பொதுத்தேர்தல் முடிந்த கையுடன் ஓய்வு பெறவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வெற்றிடமாகும் அப்பதவிக்கு மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசித்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேஜர் ஜெனரல் அத்துருசிங்க, 1980களில் இராணுவத்தில் இணைந்து, இறுதியாக போரின்போது 65ஆவது படைப் பிரிவுக்கு கீழ் இருந்த 652ஆவது பிரிவின் கீழ் இருக்கும் பீரங்கிப் படையை தலைமை தங்கியிருந்தார்.

தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அவர், யாழ் கட்டளைத் தளபதியாக இருந்தார்.