சஜித் தலைமையில் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் விசாரணைக்கு முஸ்தீபு !

(ஜே.எப்.காமிலா பேகம்)
ஐக்கிய மக்கள் சக்தியினரால் நேற்று முன்தினம் களுத்துறை பாலத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டமானது, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யும்படி கோரும் முகமாக நடத்தப்பட்டது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, அஜித் பி. பெரேரா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இதற்குத் தலைமை வகித்தார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்றும் அதனூடாக தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.