ஆலையடிவேம்பு மக்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு



(வி.சுகிர்தகுமார்)
நாட்டில் டெங்குநோய் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான செய்ற்றிட்டங்களை அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றது.


இதன் ஒரு கட்டமாக பொதுமக்களுக்கான நுளம்பு வலைகள் வழங்கும் திட்டத்தினை அவுஸ்திரேலியா மெடிக்கல் எயிட் பவுண்டேசன் நிதி உதவியுடன் அம்பாறை மாவட்ட சிவன் அருள் பவுண்டேசன் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கான நுளம்பு வலைகள் சிவன் அருள் பவுண்டேசனின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர், சிவன் அருள் பவுண்டேசனின் தலைவியும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான அனுசியா சேனாதிராஜா, சிவன் அருள் பவுண்டேசனின் செயலாளரும் சமூக நேயனுமான வே.வாமன், பொருளாளர் வி.ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நுளம்பு வலைகளை வழங்கி வைத்தனர்.

நாட்டில் டெங்கு நோய் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறான உதவிகள் வருமானம் குறைந்த மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.