தபால் மூல வாக்களிப்பிற்காக விசேட தினம் அறிவிப்பு!


தபால் மூல வாக்களிப்பிற்காக ஜூலை 13 ஆம் திகதி விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அனைத்து சுகாதார அலுவலர்கள் (எம்ஓஎச்), பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே குறித்த தினம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.