கருணா அம்மானின் வேட்பு மனுத்தாக்கலை நீக்கக் கோரி மனு

கருணா அம்மான் வேட்பு மனுத்தாக்கலை நீக்கக் கோரி நேற்று தேர்தல் ஆணையத் தலைவரிடம் ஓமல்பே சோபித தேரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான், கிளிநொச்சி சுமார் 2,000 முதல் 3,000 இராணுவ வீரர்களைக் கொலை செய்ததாக அண்மையில் இடம்பெற்ற பேரணியில் தெரிவித்த கருத்து தொடர்பால் பல சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நேற்று தேர்தல் ஆணையத் தலைவரிடம் கருணா அம்மான் வேட்பு மனுத் தாக்கல் செய்த மனுவை வேட்பாளர்கள் பட்டியலிலிருந்து நீக்குமாறு புகார் முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த கடிதத்தைத் தேசிய நிபுணர் குழுவின் தலைவர் வைத்தியர் ஓமல்பே சோபித தேரர் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில்,வண.ஹெடிகல்லே விமலசர தேரர், மிகவும் வணக்கமுள்ள பசரலமுல்ல தயவன்சா தேரர், ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன், ஓமல்பே சோபித தேரர், ராஜவத்தே வாப்ப தீரோவின் தேரர், பசரமுல்லா தயவன்ஸ தேரர், பஸ்ரமுன்லே தயாவங்ச தேரர், புதுகல ஜினவச தேரர் , ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெதகொட ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன் போது, ஓமல்பே நாயக்க தேரர் , சில அரசியல்வாதிகள் அங்குலிமாலாவின் கதாபாத்திரத்தையும் கருணா அம்மானின் கதாபாத்திரத்தையும் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளனர்.

அங்குலிமாலா ஒரு சிறந்த புத்த துறவியாக இருந்தார். அவர் கடந்த காலம் செய்த பாவங்களைப் பற்றி ஒருபோதும் உயர்த்திப் பேசவில்லை ஆனால். இன்று கருணா அம்மான் தான் செய்த பிழையை நினைத்து மனந்திருந்தாமல், தான் செய்த தவறுகளைப் பெருமைப்படுத்தி வெளிப்படையாக அறிவித்து வருகிறார்.

இது குற்றவியல் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றம் என்றும், பொருத்தமான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கக் கூடிய பிழை என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அநுர மெத்­தே­கொ­ட தெரிவித்தார். அத்தோடு, இலங்கை சட்டத்தின்படி, உயிர்களைப் பலியிடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல கூடிய குற்றமாகும். 2019 ஆம் ஆண்டில் ஜெனீவா மாநாடுகளிலும் கருணா அம்மானின் கருத்து தவறானது என தெரிவித்ததாக ஜனாதிபதியின் சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.