உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று மீண்டும் கூடுகின்றது

உயிர்த்த ஞாயிறு குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மீண்டும் கூடுகின்றது. மதியம் 12.30 இற்கு ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமாகுமென அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் பாதுகாப்பு துறையின் முக்கிய அதிகாரிகள் சிலர் சாட்சியம் வழங்கவுள்ளனர். ஒய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் கீர்த்தி ஜகநாயக்க உட்பட மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் சாட்சியம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.