கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2039 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு இன்று(திங்கட்கிழமை) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று மட்டும் மேலும் 17 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 1,678 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் தற்போது 350 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருவதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.