கட்டாரில் நிர்க்கதியாகிருந்த 264 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கட்டாரில் நிர்க்கதியாகிருந்த 264 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்ககள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் தோகா நகரில் இருந்து இன்று அதிகாலை 5.40 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்தடைந்தனர்.

அதில் அதிகளவானோர் கட்டாரிற்கு  தொழில் பெற்று சென்றவர்களாகும். நாட்டிற்கு வருகை தந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.