"செங்கோலோச்ச விளையும் பெண்ணுக்கொரு வாக்கு" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் கருத்துப்பகிர்வு

(லியோன்)
"செங்கோலோச்ச விளையும் பெண்ணுக்கொரு வாக்கு" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் பாராளுமன்ற பெண் வேட்பார்களை ஆதரித்து கருத்துப்பகிர்வு நேற்று(30) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம், அமராகுடும்பத் தலைமைதாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விழுதின் வளவாளர் மற்றும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் ஜெ எஸ் . புஸ்பலதா தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டட கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது

அடுப்படியில் இருந்து அரசியல் வரை பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பெண் வேட்பார்களை ஆதரித்து நிகழ்வில் கலந்துகொண்ட பெண்களின் கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டுமையம் , மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம், அமராகுடும்பத் தலைமைதாங்கும் பெண்கள் ஒன்றியம், 'கிழக்கின் அகல் பல்கலைக்கழகத் தன்னார்வத் தொண்டர்கள்'  ஆகிய அமைப்புக்களின் உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களான மங்களேஸ்வரி சங்கர், கோமளேஸ்வரி சங்கரப்பிள்ளை, அனஸ் பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.