சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு


வவுனியா கோவிற்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இன்று (05) மதியம் சிறுமி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இன்று மதியம் இல்லத்தின் மலசல கூடத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்..

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

16 வயதுடைய ராஜசெல்லராணி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்