கதிர்காமத்தில் பாரம்பரிய பந்தலிடும் நிகழ்வும் கொடியேற்றலும்

(காரைதீவு சகா)
வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரிய
கோவிலில் ஆதிவாசி வேடுவ குல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவமும் தெய்வானை அம்மன் வாசல் கொடியேற்ற நிகழ்வுகளும் அண்மையில் நடைபெற்றன.


அங்கு பாரம்பரிய நிகழ்வுகளான யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்செடி கொடிகள் மாணிக்கங்கையூடாக சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்படுவதையும் வேடுவ குல மக்கள் பந்தல் மேய்வதையும் தெய்வானையம்மன் ஆலயத்தில் கொடியேற்றப்படுவதையும் பூஜை இடம்பெறுவதையும் காணலாம்.