பாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை முறையொன்று இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கடந்த 26ம் திகதி மத்திய வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் அது தொடர்பான தீர்மானம் பெறப்பட்டுள்ளது. 150 மில்லியன் ரூபாவை நிவாரண கடனுதவியாக வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனூடாக வர்த்தகர்களுக்கு நிவாரணத்தை வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

சௌபாக்கியம் மிக்க வேலைத்திட்டத்திற்கு இணைவாக கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.