மட்டக்களப்பில் தரமான விதை உற்பத்தி நிலக்கடலை அறுவடை விழா

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள மாலையர்கட்டு கிராமத்தில் விதை உற்பத்தி நிலக்கடலை அறுவடை விழா நேற்று நடைபெற்றது. 

றாணமடு தொழிநுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா அவர்கள் அதிதியாகவும் மண்டூர் விவசாய போதனாசிரியர்கள் கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் நிலக்கடலை செய்கையாளர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

தரமான நிலக்கடலை செய்கைக்கான நடைமுறைகள் அறுவடையின் பின்னரான தொழிநுட்ப செயற்பாடுகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் மண்டூர் விவசாய போதனாசிரியர் பீ.பிரமேந்ராவால் வழங்கப்பட்டதுடன் விவசாய திணைக்களத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான விடயங்களை உதவி விவசாய பணிப்பாளர் தெளிவூட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் 2020 சிறுபோகத்தில் 20 ஏக்கருக்கான நிலக்கடலை விதை விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது. விளைச்சலில் தரமான விதைகள் விவசாய பண்ணையால் கொள்வனவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.