பஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது


புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவினரினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று (01.07.2020) மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கிளி இலங்கையின் விஷேட பிரிவுகளில் ஒன்றான அலெக்ஸாண்டர் பெர்ரட் (Alexander Parrot) வகையைச் சேர்ந்த 2 மாதக் குஞ்சுகள் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஞ்சவர்ண கிளிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.