மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் தேவஸ்தான மஹோற்சவ தேர் திருவிழா

(லியோன்)
மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்த அடியார்களுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.


கிழக்கிலங்கையில் சிறப்பு மிக்க அம்மன் ஆலயங்களின் ஒன்றான மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மஹோற்சவ தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் கோலாகலமாக இன்று நடைபெற்றது .

இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய மஹோற்சவ தேர்த்திருவிழா கொவிட் 19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பொதுசுகாதார பரிசோதர்களின் அறிவுறுத்தல்களுடன் சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது .