ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்புக்கான காரியாலயம் திறந்து வைப்பு

(லியோன்)
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்புக்கான காரியாலயம் மட்டக்களப்பு மத்திய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.


2020 பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை முண்னெடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதிக்கான பிரதான தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் மட்டக்களப்பு மத்திய வீதியில் திறந்து வைக்கப்படது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதிக்கான வேட்பாளர்கள் , கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதிக்கான வேட்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த காரியாலயத்தை பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.