ZOOMக்கு போட்டியாக JioMeet


ஜூம் (ZOOM app) செயலிக்குப் போட்டியாக ஜியோமீட் (JioMeet) என்னும் செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த JioMeet app, என்ட்ராய்ட் , ஐஓஎஸ், விண்டோஸ், மேக்ஓஎஸ் என அனைத்துத் தளங்களிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த app மூலம் அதிகபட்சமாக 100 பயனர்கள், காணாளி மூலம் இலவசமாக கான்ஃப்ரன்சில் பேசமுடியும். ஆடியோ, வீடியோ இரண்டும் HD தரத்தில் இருக்கும்.

ZOOM appயைப் போல 40 நிமிட நேரக் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் பாதுகாப்பான முறையில் அதிகபட்சமாக 24 மணி நேரம்வரை JioMeet மூலம் பேசமுடியும்.

ஒரு பயனர், ஒரு நாளைக்கு எத்தனை கருத்தரங்குகளை வேண்டுமானாலும் உருவாக்கி, பேச, பார்க்க முடியும். தேவைப்பட்டால் ’வெயிட்டிங் ரூம்’ என்னும் தெரிவு மூலம் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நபர்கள், அனுமதியில்லாமல் உள்நுழைவதைத் தடுக்கும் வசதியும் இதில் உண்டு.

தொலைபேசி இலக்கம் அல்லது இ-மெயில் ஐடி மூலம் எளிதாக செயலிக்குள் நுழைந்து கருத்தரங்கை உருவாக்க முடியும்.

JioMeet appல் உள்ள 'சேஃப் டிரைவிங் மோட்' தெரிவின் மூலம் வண்டி ஓட்டும்போது பேசும் வசதியும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 சாதனங்களில் உள்நுழையும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.