ஹெரோயின் மற்றும் 3 கோடியே 13 இலட்சம் ரூபா பணத்துடன் கைதுசெய்யப்பட்ட நபர் நீதிமன்றில் ஆஜர்

ஹெரோயின் மற்றும் 3 கோடியே 13 இலட்சம் ரூபா பணத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு வடக்கு பிரிவின் வீதி தடை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய தெமட்டகொட பகுதியில் இது தொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்களின் வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே அங்கியிருந்து 4 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 3 கோடியே 13 இலட்சம் ரூபா மற்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பணம் கைற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைதானவர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரென தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.