மட்டக்களப்பு முனைக்காடு பகுதியில் 35 வயது குடும்பஸ்தர் படுகொலை

(சிஹாரா லத்தீப்)
மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவின் முனைக்காடு பகுதியில் இனம்தெரியாதவர்களால் தாக்குதலுக்குள்ளான 35 வயது குடும்பஸ்தரொருவர் நேற்றிரவு (2 3) படுகொலை செய்யப்பட்டுள்ளார்

இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர் முனைக்காடு பகுதியைச் சேர்ந்த ரத்னசிங்கம் உதயன் என கொக்கட்டிசோலை பொலிசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முஹம்மத் ரிஸ்வான் இன்று காலை ஸ்தலத்துக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதிவரை பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கலாமென்று நீதிபதி அறிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர் சில குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் இரண்டு திருமணம் முடித்த இவர் ஐந்து பிள்ளைகளின் தகப்பன் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் மென்டிசின் அறிவுறுத்தலில் களுவாஞ்சிகுடி உதவிப்பொலிஸ் அத்தியட்சர் எச்.எம். பாறூக்கின் கண்காணிப்பில் கொக்கட்டிச்சோலை பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.