தேசிய மட்ட போட்டியில் பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாண வீரர்களுக்கு கௌரவிப்பு!


(நிரோசன்)
வர்ண கௌரவிப்பு நிகழ்வானது (14) திங்கட்கிழமை 02.30 மணியளவில் அம்பாரையில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண விளையாட்டு இயக்குனர் எம்.என் நோபாஸ் தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்மத், அம்பாரை மாவட்ட பிரதி அமைச்சர் டி.வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண சபை பொறுப்பதிகாரி சென்ட்ரல் ராஜகலப்பதி, கிழக்கு மாகாண தலைமை செயலாளர் துஷிதா வன்னிக யசிங்க கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது 45 வது தேசிய போட்டியில் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை, மாவட்டங்களில் இருந்து பங்குபற்றி பதக்கங்களை வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்ளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.