மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி!

மட்டக்களப்பு ஊறணி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு கஞ்சா வியாபாரியை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் நேற்று(14) உத்தரவிட்டார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை(13) ஊறணி பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 600 மில்லிக் கிராம் கஞ்சாவுடன் கைது செய்ததுடன் ஆவரிடம் இருந்து மேலும் 2400 மில்லிக் கிராம் கஞ்சாவை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பிணையில் வெளிவந்து தலைமறைவாகி வந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இவரை நேற்று(14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 27ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.