தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சி, பெரிய பரந்தன் பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் பழைய வளாகத்தில் இருந்து மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் உட்பட இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ள நிலையில் அயலவர்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தூங்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அவதானித்துள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்கை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பட்டதாரி நியமனம் பெற்ற பெண் ஒருவரும் மற்றும் இலங்கை மின்சார சபையில் பணி புரியும் ஆண் ஒருவருமே இவ்வாறு தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.