பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா!


பொலன்னறுவை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் இன்று (16) தெரிவித்துள்ளன.

அவர் கடந்த 11ம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தொண்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண் வசிக்கும் இடம் மற்றும் அவருடன் நெருக்கமாக பழகியோர் குறித்து ஆராய இரண்டு சுகாதார குழுக்கள் நியமிக்கபட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி நிட்டம்புவை பிரதேசத்தில் தேரர் ஒருவர் நடாத்திய பாரம்பரிய கண் சம்பந்தமான கிளினிக் ஒன்றில் இவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.