சூப்பர் மார்க்கெட்க்கு சென்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி – சிசிடிவி காட்சி!


உயிர்த்த ஞாயிறு தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாசீம் மற்றும் பிற தற்கொலை குண்டுதாரிகள் பாணந்துறை சரிக்காமுல்லையில் உள்ள வீட்டை காலணி விற்பனை செய்வதாக தெரிவித்தே வாடகைக்கு பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிய வந்துள்ளது.

குறித்த வீட்டை கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என்பவரே வாடகைக்கு எடுத்துள்ளார்.

ஆணைக்குழுவில் நேற்று (27) சரிக்காமுல்ல பழைய வீதியில் அமைந்துள்ள குண்டுதாரிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் எஸ்.எம். இல்ஹாம் என்பவர் சாட்சியமளித்தார்.

குண்டுதாரி தான் காலணி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், வாடகைக்கு எடுக்கும் வீட்டில் நண்பரும், மூன்று குழந்தைகளும், அவர்களின் மனைவிகளும் வசிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியதாக வீட்டு உரிமையாளர் சாட்சியம் வழங்கினார்.

அதன்படி, 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி, மாதம் ஒன்றுக்கு 40,000 ரூபா படி 12 மாதங்களுக்கு அதாவது 480,000 ரூபாவை ஆரம்ப தொகையாக பெற்றுக்கொண்டு வீட்டின் சாவியை அவர்களிடம் கையளித்தாக வீட்டின் உரிமையாளர் ஆணைக்குழுவில் கூறினார்.

தாக்குதல் நடந்த நாள் மாலை 4 மணியளவில், அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அருகில் தன்னிடம் வந்த ஒரு முஸ்லிம் இளைஞர், ´இல்ஹாம் உங்கள் வீட்டை இராணுவம் சுற்றி வளைத்துள்ளது ஆகவே ´ஓடுங்கள், ஓடுங்கள்´ என கூறியதாகவும் வீட்டின் உரிமையாளர் கூறினார்.

எனினும் தான் வீட்டிற்குச் சென்றதாகவும், அதன் உரிமையாளர் என்று தன்னை அடையாளப்படுத்தி தனது சட்டத்தரணியை வரவழைத்து வீட்டை வாடகைக்கு விடுவது தொடர்பான சட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்ததாகவும் சாட்சியாளர் மேலும் கூறினார்.

கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரி மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் பொருட்கள் வாங்கிய பல்பொருள் கடையில் தான் ஒரு விசுவாச அட்டை வைத்திருக்கும் நபர் என கூறி தன்னை அடையாளப்படுத்தி இருந்தாக சாட்சியாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

அத தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன