கோறளைப்பற்று மத்தியில் அறுபது பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் நெருங்கிய உறவுகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையில் இருபத்தி ஆறு(26) நபருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக மொத்தம் 27 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்ற அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினரால் விபரங்கள், திரட்டப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அறுபது பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.

குறித்த பி.சி.ஆர். பரிசோதனை நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.