திருமணம், இறுதி சடங்கு நடத்துவது குறித்து பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!

தற்போது திருமணம் செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெளிவுபடுத்தியுள்ளார்.

பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகள் மற்றும் ஏனைய பகுதிகளில் இடம்பெறவுள்ள திருமண விழா, விளையாட்டு விழாக்கள், ஏனைய விழாக்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். திருமண விழாவின் போது சுகாதார பிரிவில் ஆலோசனை பெற்று பொலிஸாருக்கு அறிவித்து திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டு திருமண விழாவை நடத்த முடியும்.

இறுதி சடங்கின் போது பிறிதொரு இடத்திலிருந்து வருதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த இடத்திருந்து ஊரடங்கு பிறப்பிக்காத இடத்திற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நெருங்கிய உறவினராக இருந்தால் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.