சவேந்திர சில்வா மீதான பயணத்தடையானது சட்டங்களுக்கு அமைய யதார்த்தம் : மைக் பொம்பியோ

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தினர் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பயணத் தடை குறித்து மீளாய்வு செய்வதாக அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சில் நடந்த ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

இந்த ஊடக சந்திப்பின்போது இராணுவத் தளபதி மீது காணப்படுகிற பயணத்தடை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குபதிலளித்த மைக் பொம்பியோ, அமெரிக்காவில் உள்ள சட்டங்களுக்கு அமைய அவர் மீது பயணத்தடை விதித்திருப்பது யதார்த்தம் என்றாலும் அதன் சட்டரீதியான செல்லுபடி தன்மை குறித்து மீளாய்வு செய்வதாக பதிலளித்தார்.

 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி கட்டங்களில் செய்யப்பட்ட போர்க்குற்றங்களுக்காக ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா (2020 பிப்ரவரி) தடை  விதித்தது