மட்டக்களப்பில் நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையம் அங்குரார்ப்பண நிகழ்வு

(லியோன்)
சர்வதேச மீனவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையம் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு நாவலடியில் நடைபெற்றது.

நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையத்தின் பணிப்பாளர் உ.யுவநாதன் தலைமையில் மட்டக்களப்பு நாவலடி பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையம் திட்ட இணைப்பாளர் எம்.சுரேஷ்குமார், நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையம் பிரதேச இணைப்பாளர் எஸ்.குணசீலன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர், பி.சசிகரன், மனுமாய் வடக்கு மீன்பிடி பரிசோதகர் ஆர்.ரஜிகரன் மற்றும் மீனவ இயக்க அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையம் அங்குரார்ப்பண நிகழ்வின் போது சட்ட விரோத மீன்பிடியின் தாக்கம், மீன்பிடி சட்டங்கள்,சர்வதேச மீனவர் தினமும் நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையத்தின் நோக்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதனை தொடர்ந்து நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையம் அங்குரார்ப்பணம் தொடர்பாக ஊடக சந்திப்பு நடைபெற்றது. குறித்த மையம் தொடர்பான நோக்கத்தினை நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையத்தின் பணிப்பாளர் உ.யுவநாதன் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்தார்.