பாடசாலை ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுப்பு

(பைஷல் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் தொடராக பெய்துவரும் அடை மழை காரணமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் பாதைகள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள், குடியிருப்பாளர்கள், போக்கு வரத்துப் பயணிகள் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் உள்ள முக்கிய சில வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியாதளவு மழை நீரில் சேரும் சகதியுமாக காணப்படுகின்ற விடயத்தைப் பற்றி அப்பிரதேச மக்கள் குறித்த வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஜெமிலா ஹமீத்தீன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை கருத்தில் கொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஜெமிலா ஹமீட் குறித்த விடயத்தை தவிசாளர்  ஏ.எல்.அமானுல்லாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் உள்ள ஆர்.டி.எஸ் வீதி, மூமீன் பள்ளிவாசல் வீதி, ஆற்றங்கரை வீதி, கடற்கரை வீதி போன்றவற்றுக்கு கிரவல் இடும் பணி இன்று(21) பிரதேச சபை உறுப்பினர் ஜெமிலா ஹமீத்தீன் மேற்பார்வையில் இடம்பெற்றது.

இவ்வாறு கிரவல் இட்டு செட்பனிடப்பட்டு வருகின்ற நான்கு வீதிகளாலும் அதிகமான பாடசாலை மாணவர்கள், கடற்கரை மற்றும் ஆற்று மீன்பிடி மீனவ தொழிலாளிகள் உள்ளிட்ட பலர் இந்த வீதியால் மிக அதிகமாக பயணிக்கின்ற வீதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.