இருபத்து மூன்று வருட கல்விச்சேவையில் பிரதி அதிபராக ஓய்வு பெற்றார் திரு பூபாலபிள்ளை கந்தசாமி ஆசிரியர்


(ஜே.மேவின்)

திரு.பு கந்தசாமி ஆசிரியர் அவா்கள் மகிழூா்முனையினை பிறப்பிடமாக கொண்டவா். 1960-11-29 அன்று பிறந்த அவா் ஆரம்ப கல்வியை மகிழூா்முனை அரசினா் தமிழ் கலவன் பாடசாலையில் கற்று உயா்தரத்தினை பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நிறைவு செய்தார்.

ஆங்கிலத்தில் விஷேட கற்கை நெறியினை நிறைவு செய்து. 1997-01-01 அன்று ஆங்கில பாட ஆசிாியராக நியமனம் பெற்று திருகோணமலை ஈச்சலம்பற்று பாடசாலையில் ஆசிாியராக கடமையாற்றி அத்துடன் தேற்றாத்தீவு முனைக்காடு களுதாவளை என பல பாடசாலைகளில் சேவையாற்றி பல ஆங்கில ஆசான்களையும் கல்விமான்களையும் உருவாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது .

இறுதியாக மட்/ பட்/ மகிழூா்முனை சக்தி வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசானாக இணைந்து சேவையாற்றியதுடன் பாடசாலையின் வளா்ச்சிக்கு தன்னை முழுமையாக அா்ப்பணித்து பிரதி அதிபராக பதிவி உயா்வு பெற்றாா்.

இவரது சேவைக்காலத்தில் மாணவா்கள் ஆங்கிலத்தில் ஏ பி சித்திகளைப் பெற்றுள்ளனா். அத்துடன் பல சமூக சேவைகளிளும் ஈடுபட்டு மாணவா்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் பல நன்மைகளைச் செய்துள்ளாா். அவா் இன்று (29-11-2020) அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றாா். ஆனாலும் அவா் தமக்கு பல சேவைகளை தொடா்ந்தும் செய்வாா் என்ற நம்பிக்கையில் மாணவா்களும் பெற்றோரும் காணப்படுகின்றனா். அவரது சேவைக்கு சமூக ஆா்வலா்கள் வெகுவாக பாராட்டுகின்றனா் .

திரு கந்தசாமி ஆசிரியாின் சேவையை பாராட்டி பிாியாவிடை நிகழ்வானது கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப சுகாதார அதிகாாிகளின் ஆலோசனைக்கு அமைவாக அதிபா் ஆசிாியா்களினால் நடாத்தப்பட்டது .

இதில் அதிபர்  ஆசிரியரால் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், மோதிரம் அணிவித்ததுடன் வாழ்த்து மடலும் வழங்கப்பட்டது .

மேலும் அதிபர் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து திரு கந்தசாமி ஆசிரியரை அவரது வீட்டிற்கு விஷேட வாகனத்தில் சமூக இடைவெளிகளைப் பேணி அழைத்துச்சென்று விட்டமையானது அன்னாரின் சேவைக்கு அனைவரும் மதிப்பளித்தமையை எடுத்துக்காட்டியதுடன், அதிபர் திரு தேவராஜா அவா்களின் சிறந்த நிர்வாகத்தையும் வெளிப்படுத்தும் அம்சமாகவும் அமைந்திருந்தது.

அன்னாரின் சேவை தொடர்ந்தும் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் அவசியம் என அனைவரும் கேட்டுக்கொண்டதுடன் அனைவரும் திரு கந்தசாமி ஆசிரியரை வாழ்த்தி நன்றிகளை தொிவித்தனா்.