அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்கவும்- ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்

(வி.சுகிர்தகுமார்)
ஆலையடிவேம்பு பிரதேசவாழ் மக்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் விடுக்கும் வேண்டுகோள்

கொரோனா தொற்று தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல்

எமது அக்கரைப்பற்று நகர் பகுதி மற்றும் மீன்சந்தையினை அன்மித்த பகுதியில் சுகாதார துறையினரால் மேற்கொள்ளபட்ட எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனை மூலம் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே தாங்களும் தங்களது உறவுகளும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

கொரோனா தொற்று என்பது எம்மை அறியாமல் எமக்குள் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளது. ஆகவே இதில் இருந்து விடுபடுவதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தருணம் இது.

அந்த வகையில் நம்மில் எவரேனும் நகர் பகுதியில் அதிக தொடர்புகளை பேணியவர்களாக இருந்தால் முதற்கண் நம்மை நாமே சுயதனிமைப்படுத்தலில் உட்படுத்துவதன் மூலம் எம்மையும் எமது சுற்றத்தாரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

மேலும் கொரோனா தொடர்பான அறிகுறிகளான காய்ச்சல், உடல்வெப்பநிலை அதிகரிப்பு உடற்சோர்வு தொண்டைநோவு காணப்படின் 1999 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0672277528 எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு உரிய மருத்துவ உதவியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறியத்தருகின்றோம்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்