கிழக்கு மாகாணத்தில் 32 பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது


கிழக்கு மாகாணத்தில் 32 பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தின் 25 பாடசாலைகளும் கல்முனை கல்வி வலயத்தின் 5 பாடசாலைகளும் திருக்கோவில் வலய ஒரு பாடசாலையும் மற்றும் அம்பாறையில் ஒரு பாடசாலையும் என 32 பாடசாலைகள் நாளை ஆரம்பமாக மாட்டாது என அவர் அறிவித்துள்ளார்.

மாகாண ஆளுனர் மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் வலயக் கல்வி அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது