மட்டக்களப்பு நகரில் மேலும் 5 பேருக்கு கொரோனா ! அரசடி முடக்கம்


(சிவம் )
மட்டக்களப்பு அரசடி மூர் வீதியில் கொரோணாவினால்  மரணமடைந்தவரின் வீட்டிற்குச் சென்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு மரணமானவரின் வீட்டிலுள்ள 09 பேருக்கு அன்ரிஜன்; பரிசோதனையை நேற்று (16) மேற்கொண்டபோது அதில் 5 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அரசடியில் இதுவரை 17 பேர் கொரோணா தொற்றுள்ளவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதோடு சடலம் பொலன்நறுவை வைத்தியசாலைக்கு எரிப்பதற்காக அனுப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 5 பேர் மரணமடைந்துள்ளார்கள் என 
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்

இதனால் பன்சல வீதி, பயனியர் வீதி, லேடி மெனிங் ரைவ், கொவட் லேன், அரசடிப் பிள்ளையார் கோயில் விதி, சுப்பையா லேன், பழைய வாடி வீட்டு வீதி என்பன முடக்கப்பட்டள்ளதோடு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முடக்கப்பட்டுள்ள அரசடிப் பிரிவில் உள்ளவர்களுக்கு நாளை (18) அன்ரிஜன் பரீட்சை நடாத்தப்படவுள்ளதோடு அதில் இறுதிவரை தொற்றாளர்கள் இனங்காணபடாத வரையில் முடக்கம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.