ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் தரம் 6ற்கான புதிய மாணவர்களை வரவேற்றல் முகக்கவசம் வழங்கல்!



(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் தரம் 6ற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், பாதுகாப்பு முகக்கவசம் வழங்கும் நிகழ்வும் நேற்று  திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஸாக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், ஓட்டமாவடி கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஷாப், ஓட்;டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸ், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பொதுச் சுகாதார பரசோதகர், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் 2021ம் ஆண்டுக்கான தரம் 06ற்கான 200 புதிய மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்வானது சுகாதார நடைமுறை பின்பற்றி இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தரம் 6ற்கான 200 புதிய மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஓட்;டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸின் நிதி உதவி மூலம் பாதுகாப்பு முக்குக் கண்ணாடியுடனான முகக்கசவம் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.