மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 21 சுகாதார துறை ஊழியர்களுக்கு கொரோனா


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 21 சுகாதார துறை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் கலா ரஞ்சனி கணேஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு வருபவர்களை சுகாதார நடைமுறைகளை பேண வேண்டும் என்றும் நோயாளர்களை பார்வையிட 15 நிமிடம் மாத்திர அணுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 387 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 132 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதுடன் 255 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.