பிரபாகரனுக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள் ! கோத்தாபயவுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன - ஜனாதிபதி தெரிவிப்பு


மகா சங்கத்தினர் உட்பட மக்கள் தான் ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு இருந்த பாதுகாப்பு செயலாளரின் வகிபாகத்தை எதிர்பார்க்கின்றனர். பித்தளை சந்தியில், எல் டீ டீ யீ பயங்கரவாதிகள் தன்னை இலக்குவைத்து தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தினர். அதைச் செய்த பயங்கரவாதத் தலைவருக்கு நேர்ந்த கதியை மக்கள் அறிவார்கள். நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ என்ற எந்த ஆளுமைக்கு ஏற்பவும் செயற்பட தயார் என்ற போதும், எதிர்க்கட்சி போன்று மோசமான அரசியலுக்கு தான் தயாராக இல்லை   

தவறு செய்தவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் கடமையாகும். அதில் தலையிட்டு முந்தைய அரசாங்கம் செய்ததைப் போல அரசியல் பழிவாங்க தான் தயாராக இல்லை மக்களை தவறாக வழிநடத்தாமல் நியாயமான அரசியலில் ஈடுபடுமாறு எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன் . 

இன்று (09) காலை அம்பாறை, உஹனவில் உள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.