ஜோசப் பரராஜசிங்கத்தைக் கண்டதே கிடையாது- ஒரு தடவை தூரத்தில் இருந்து பார்த்தேன்- பிள்ளையான்



(வரதன்) 
ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது எனவும் அவரை ஒரேயொரு முறை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்தவர்களை மகிழ்விப்பதற்காகவே என்னை சிறையில் அடைத்து வைத்தார்கள்.  இன்று நீதித்துறை என்னை வெள்ளைப் பேப்பரால் கழுவி விடுதலை செய்திருக்கிறது. என்று தெரிவித்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசமுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வென்றவர்களை விடுதலைப் புலிகளை வைத்து சுட்டுத் தள்ளிவிட்டு அவர்களுக்குரியவர்களை மாவட்டத்திற்கு நியமித்தார்கள்.
இப்பொழுதும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு இறந்தவர்களது படுகொலைக்கு எந்தவித விசாரணையும் இல்லை என்றும் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
இன்று நீதித்துறையினுடைய எனக்கானஅறிவிப்பு வந்திருக்கிறது. இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் என்னுடைய வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்திருக்கிறது.


100 வீதம் 2015ஆம் ஆண்டுவந்த நல்லாட்சி அரசாங்கம், அவர்களோடு வந்தவர்களுக்கு கொடுத்த பரிசு என்னுடைய கைது. அவர்களுக்கு முண்டுகொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோழுக்கிணங்க மைத்திரிபால சிறிசேன கையொப்பத்தை இட்டதன் காரணமாக நான் வாடினேன்.


என்னை கிழக்கிலே வளர வைத்தால் அவர்களை அவர்களது அரசியல் அழிந்து விடும் அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து இங்கு தேர்தல் கேட்க முடியாது என்று உறுதியாக நம்பியவர்கள். இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை இயற்றுவதற்கு உறுதுணையாக இருந்த பிதாமகர்கள். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி என்னை அடைத்தார்கள்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வென்றவர்களை விடுதலைப் புலிகளை வைத்து சுட்டுத் தள்ளிவிட்டு அவர்களுக்குரியவர்களை மாவட்டத்திற்கு நியமித்தார்கள். இப்பொழுதும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு இறந்தவர்களது படுகொலைக்கு எந்தவித விசாரணையும் இல்லை.


யாராவது நான் சொன்னதாக உறுதியாகச் சொன்னார்களா ஒன்றுமேயில்லை. எந்தவிதமான கண்ட தொழில்நுட்ப எந்தவிதமான சாட்சியும் இல்லாமல் என்னை அழைத்தார்கள். எவ்வளவு அசிங்கமான பணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் இயற்றியது. நடத்திக் காட்டியது. யாரும் கண்டுகொள்ளவேயில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்கிய பிதா மக்கள் என்னை மட்டும் அதில் தண்டிக்க வேண்டும். மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற இரட்டை முகத்தை காட்டுகிறார்கள்.


யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பல எம்பிக்கள் தோற்ற எம்பிக்கள் எல்லாம். வரலாறு என்னை விடுதலை செய்யும் நான் குற்றமற்றவன் எந்தவிதமான களங்க மற்றவன். இன்று நீதித்துறைக்கு நன்றி செலுத்துகின்றேன் நீதித்துறை தன்னுடைய அறிவிப்பில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.


பிள்ளையானுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இந்த வழக்கில் இல்லை என்று அழகாக என்னை கழுவி விடுதலை செய்திருக்கிறது. ஆகையால் நீதித்துறைக்கும் என்னுடைய விடுதலைக்காக போராடிய சட்டத்துறையினருக்கும் சட்டத்தரணி அணில் சில்வா குழாமுக்கும் குறிப்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழர்கள் பல சட்டத்தரணிகள் இருந்தாலும் எங்களுடைய வழக்கை பார்க்கவும் இல்லை சில நேரங்களில் பல வேதனையான சம்பவங்களும் இடம்பெற்றன. எங்களுடைய வேண்டுதலை கூட ஏற்க மறுத்த சந்தர்ப்பங்கள் இருக்கிறது. அவர்களையும் நல்லாட்சி அரசாங்கம் மகிழ்ச்சி பட வைத்தது.


சுமந்திரன் போன்றவர்கள் அந்த நேரத்தில் வெளிநாட்டு அமைச்சராக இருந்த மங்கள சமரசிங்க போன்றவர்கள் எல்லாம் இதில் தலையிட செய்தார்கள். ஆகையால் நல்லாட்சி அரசாங்கம் தான் நீதித்துறையை தனக்குச் சார்பாக பயன்படுத்தி மக்களையும் எங்களையும் பழிவாங்கியது என்பதற்கு நான் தான் சாட்சி. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் முழுக்க முழுக்க நீதித்துறையை கேவலப் படுத்தினார் என்பதை உறுதிப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.


அந்த வழக்கோடு என்னுடைய வழக்கை சம்பந்தப்படுத்தி பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பேசுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தனை, சுமந்திரனை கொஞ்சம் யாழ்ப்பாணத்தார்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக செய்த ஒரு குற்றச்சாட்டு. அதிலேயே சாதாரண நீதித்துறையில் என்னை அடக்க முடியாது என்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி அழைத்தார்கள்.


என்னை விடுதலை செய்து அவரை அடைகிறததாம். அவர் நீதித்துறையை எப்படி விமர்சித்தது என்னவெல்லாம் செய்தார் என்பதற்கு பல ஒலிநாடாக்கள் வெளிவந்ததை எல்லோரும் அறிவீர்கள்.


. ஏதோ ஜனாதிபதி தன்னுடைய பலத்தை பாவித்து விடுதலை செய்கின்றார் என்ற ஒரு மாயை உருவாக்க எண்ணுகிறார்கள் . பிள்ளையான் அவர்களை, இந்த இரண்டு சாட்சிகளை வைத்து வழக்கு நடத்த முடியாது அதற்கான ஏதுக்கள்இல்லை என்று நிராகரித்து, அதன் காரணமாக அதை அடிப்படையாக வைத்து இன்று மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.


இவற்றையெல்லாம் விளங்கிக் கொள்ளாத எதிர்க்கட்சியினர் தங்களுடைய அரசியலுக்காக ஏதோ பிள்ளையான் ஒரு குற்றவாளி, ஜனாதிபதி அவர்களுடைய அதிகாரத்திலேயே விடுவித்ததுபோன்ற மாயையைத் தோற்றுவிக்கிறார்கள்.


நான் இந்த வழக்கு சம்பந்தமாக ஜனாதிபதியையோ பிரதமரையோ சந்தித்ததுகிடையாது. கதைத்ததும் கிடையாது. ஏன், எனக்கு தெரியும். இந்த வழக்கில் ஒன்று நடத்த முடியாது. என்னை கைது செய்த சிஐடிக்கு தெரியும் அப்போது இருந்த சானி அபேசேகரவுக்குத் தெரியும் அப்பொழுது இருந்த பொலிஸ் மா அதிபருக்கும் தெரியும். ஏன் மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட தெரியும் இந்த வழக்கை நடத்த முடியாது என்று தெரியும்.
முழுக்க முழுக்க அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டே கிடந்தேன் என்று தெரிவித்தார்.