மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்!மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக பூசை வெள்ளி அன்று (19) அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் எளிமையான முறையில் கொரோனா தொற்றுக்காரணமாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்துக்கொண்டு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு ஜெகதீசக்குருக்கள் மற்றும் அவரது குழுவினரால் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது. 

ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று 4 ஆவது ஆண்டு நிறைவையொட்டி 108 சங்குகளை கொண்டு இவ் விஷேட சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பூசை நிகழ்வுகளில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காளர் திருமதி இந்திரா மோகன் உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.