அம்பாறை - உகண பகுதியில் 8000 அடி உயரத்தில் பரசூட் விபத்து! 34 வயது இளைஞர் பலி! ஒருவர் படு காயம்!


(பாறுக் ஷிஹான்)
அம்பாறையில் மாவட்டத்தில் உகன விமானப்படை முகாமின் பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு பரசூட் வீரர்கள் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் ஒரு விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(21) காலை குறித்த இரு வீரர்களும் சுமார் 3500 அடி உயரத்தில் இருந்து குதித்த நிலையில் இவ்விரு வீரர்களதும் பரசூட்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு சிக்குண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

மேலும் இவ்விபத்தில் இறந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் இவ்விபத்தில் காயமடைந்த மற்றைய விமானப் படை வீரர் சிகிச்சைக்காக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி மாவட்டம் கடுகஸ்தோட்டை பொல்கொல்லை பகுதியை சேர்ந்த ஸ்கொட் லீடர் பத்மதிலக(வயது-34 ) என்பவராவார்.