சமூக வலைத்தள பதிவுகளுக்கு விரைவில் அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டு சட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது


சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாட்டுப் புதிய சட்டங்களை அறிமுகஞ்செய்ய அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்ற போலிச் செய்திகள், வெறுப்புணர்வைத் தூண்டுகின்ற தகவல்கள், பதிவுகள், இனங்களுக்கு இடையிலான முருகலை ஏற்படுத்தும் பதிவுகள் என்பன குறித்து விசாரணை செய்யவும், அவற்றைத் தடை செய்யவும் நோக்கில் இந்த சட்டங்களை இயற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதுதவிர, இலங்கை பத்திரிகைச் சபையின் சட்டம் பழைமை வாய்ந்த படியினால் அதனை மாற்றியமைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவே கூறப்படுகின்றது.