தாயால் சித்திரவதை செய்யப்பட்ட 8 மாத குழந்தையை காப்பாற்றத் தவறிய அரச உத்தியோகத்தர்கள் ! தாய் கைது

 

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மணியந்தோட்டம் பகுதியில் நேற்றிரவு 8 மாத குழந்தை அவருடைய தாயாரால் கொடுமையாக அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி இணைய தளங்களில் வைரலாகி வந்த போதும் குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நல்லூர் பிரதேச செயலர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு இரவு 10 மணியளவில் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களினால் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டும் குறித்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்லாது இன்று காலை 8:00 இன் பின்னரே யாழ்ப்பான போலீசாருடன் சென்று குழந்தையை மீட்டுள்ளார்கள்

இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் ஒரு குழந்தைக்கு கொடுமை நடைபெற்றபோது சம்பவ இடத்திற்கு சென்றிருந்தால். குழந்தையை காப்பாற்றியிருக்க முடியும்

அந்த குழந்தை நேற்றிரவு குறித்த தாயாரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அதன் பொறுப்பை நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரே பொறுப்பேற்றிருக்க வேண்டும் .

குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நல்லூர் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்பில் நடந்து கொண்ட விதம் தொடர்பில் தகுந்த விசாரணை நடாத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்