உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி!


மற்றைய பிரதான சூத்திரதாரி ஹஜ்ஜுல் அக்பர் 
இவ்வாறான கொள்கைகளை கொண்டு வந்தவர்களே பிரதான சூத்திரதாரிகள்

- 32 பிரதான சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு
- 75 பேர் தடுப்புக் காவலில்; 112 பேர் விளக்கமறியலில்

2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி, நௌபர் மெளலவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நேற்று  (06) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக நெளபர் மௌலவி என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.