தமிழரசுக் கட்சியின் கிளைகள் மறுசீரமைப்பு மேற்கொள்ள நடவடிக்கை! இணைய , புதுப்பிக்க விண்ணப்பம்!



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட மூலக் கிளைகள் மறுசீரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டக் கிளைத் தலைவர் ச.குகதாசன் தெரிவித்தார்.

எனவே, உறுப்புரிமையைப் புதுப்பிக்க விரும்புவோரும் புதிதாக இணைய விரும்புவோரும் தத்தம் பகுதி வட்டாரக்கிளை, கோட்டக்கிளை அல்லது 161 , மின்சார நிலைய வீதி, திருகோணமலை என்னும் முகவரியில் அமைந்துள்ள மாவட்டப் பணிமனையோடு தொடர்புகொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு 0262223063 / 0776014737 ஆகிய இலக்கங்களோடு தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.