மஹிந்தவை கைவிட்ட ஜனாதிபதியின் செயலாளர்-சீனா முன் அவமானம்!



கொரோனா தொற்றை தடுப்பதற்கான உபகரணங்களை வழங்குவது சார்ந்த சீனத் தூதுவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கம் சார்பில் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளாதிருந்தமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடிதம் ஊடாக சீனாவிடம் உதவிகோரியிருந்தார்.

அதற்கமைய சீன அரசாங்கத்தினால் உபகரணங்கள், ஒக்சிஜன் சிலிண்டர்கள் என்பன வழங்க விருப்பம் வெளியிடப்பட்டதோடு கடந்த வாரத்தில் அதற்கான பேச்சை நடத்தவும் பிரதமருக்கு சீனத்தரப்பிடமிருந்து அழைப்பு கிடைத்திருந்தது.

இந்த அழைப்பின் பேரில் தூதவரை சந்தித்த பிரதமர், இச்சந்திப்பிற்கு ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, நிதியமைச்சின் செயலாளர் என பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளையும் அழைத்திருந்தார்.

எனினும் பிரதமரின் அழைப்பிற்கமைய ஜனாதிபதியின் செயலாளரோ அல்லது நிதியமைச்சு சார்ந்த பொறுப்பதிகாரிகளோ கலந்துகொள்ளவில்லை.

இதன் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனத் தூதுவருக்கு முன்பாக சங்கடநிலை ஏற்பட்டதோடு பேச்சுவார்த்தையை முழுமைப்படுத்த முடியாமலும் போனதாக கூறப்படுகின்றது.