24 நாட்களில், 240 கோடி ரூபாவிற்கு கசிப்பு அருந்திய இலங்கையர்கள்



கொவிட்−19 வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப் பகுதியில், சட்டவிரோத மதுபான (கசிப்பு) பாவனை அதிகரித்துள்ளதாக பொலிஸார் மற்றும் கலால்வரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளமையே, இந்த சட்டவிரோத மதுபான பாவனை அதிகரிக்க காரணம் என தெரிய வந்துள்ளது.

இதன்படி, குறித்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் மாத்திரம் மதுபான பிரியர்களினால், 240 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுபானமான கசிப்பை அருந்தியுள்ளதாக பொலிஸார் மற்றும் கலால்வரித் திணைக்கள தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மதுபானம் பயன்படுத்தப்படுவதாக கலால்வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கடந்த 24 நாட்களில் சட்டவிரோத மதுபாவனை பல மடங்காக அதிகரித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது