குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக திறப்பு


குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா பிரதேச அலுவலகங்கள் அத்தியாவசிய சேவை பெறுநர்களுக்காக நாளை (15) முதல் இயங்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, அத்தியாவசிய சேவைகளை பெறும் தேவையுடைய சேவை பெறுநர்கள் மாத்திரம் தாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள அலுவலகத்திற்கு செல்ல முடியும்.

பத்தரமுல்லை தலைமை காரியாலயம் தொடர்ந்தும் ஒரு நாள் சேவை ஊடாக வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருநாகல் பிராந்திய காரியாலயங்கள் காலை 09 மணி முதல் மதியம் 01 மணி வரை திறந்திருக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் பெருந்தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் அவ்வப்போது எடுக்கப்படும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களுக்கு ஏற்ப, திணைக்களத்தின் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.