நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணிகளாகும்


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் 80 சதவீதமானோர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன நோய்களுக்கு உள்ளானவர்கள் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, இவையிரண்டு நோய்களும், கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களில் 75,000 இற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர் என ​சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை 3,000 இற்கும் மேற்பட்ட கொரோனாவினால் உயிரிழந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.