மின்சார கொடுப்பனவு இன்றேல் மின்துண்டிப்பு - மின்சார சபை எச்சரிக்கைதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்திலும் மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை செலுத்தும்படி இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மின்சார வசதியை தடையின்றி பெற வேண்டுமென்றால் மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை தொலைபேசி செயலி மற்றும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாக செலுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.