15 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி − திகதி அறிவிப்பு

15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கின்றார்.

பாடசாலை சுகாதார பிரிவை இந்த நடவடிக்கைக்கு ஈடுபடுத்த சுகாதார அமைச்சு எண்ணியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மாணவர்கள் தொடர்பிலான தரவுகளை பாடசாலை அதிபர்களின் ஊடாக கோரி, அதனூடாக மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மிக குறுகிய காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி, நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விதம் குறித்து, தமது சுகாதார அதிகாரிகளுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தடுப்பூசி செலுத்தும் போது இடம்பெறும் மோசடிகளை தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே, தடுப்பூசிகளை பாடசாலைகளிலேயே செலுத்த திட்டமிட்டதாகவும் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கின்றார்.