2 கோடி ரூபா பெறுமதியான சிகரெட்களுடன் இருவர் கைதுஇரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்களுடன் இருவர் களனி – கோணவல, கொஹொல்வில வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6,800 சிகரெட்களுடன், வத்தளை ஹூனுப்பிட்டியவை சேர்ந்த 21 வயதானவர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கோணவல பகுதியில் உள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்திய போது, அங்கிருந்த 2 இலட்சம் சிகரெட்களுடன் 48 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக களனி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்தது.